இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும்: உலக வங்கி

வாஷிங்டன், ஓக.7

நடப்பு நிதியாண்டில்(2022-2023) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னதாக நேற்று தெற்காசிய பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உலக நாடுகளை விட இந்தியா வலுவாக மீண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஜூன் மாத கணிப்புகளை விட ஒரு சதவீதம் குறைந்து 6.5 சதவீதம் ஆக கணிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிக நிதிச் செலவுகளால் தனியார் முதலீட்டு வளர்ச்சியானது குறைய வாய்ப்புள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் ஆக குறைந்தது இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் நிதியாண்டில் இந்தியாவிற்கான ஜிடிபி வளர்ச்சியினை உலக வங்கி திருத்தம் செய்வது இது மூன்றாவது முறையாகும்.

Leave a Reply