
பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் மிக அவதானமாக இருக்க வேண்டியது மார்பக புற்றுநோயாகும். பெண்கள் தாய்ப்பால் கொடுக்காமல்விட்டால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
இவ்வாறு பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் தொடர்பில் கருத்துரைக்கையில் மன்னார் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும்போது;
உலகளாவிய ரீதியில் ஒக்ரோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வுகள் கடந்த மாதம் இடம்பெற்றன.
ஒவ்வொரு பெண்களும் வீடுகளிலேயே சுயபரிசோதனை செய்யும்போது மார்பகங்களில் ஏதேனும் வி கட்டிகள், தோல்களில் வித்தியாகம், அக்குள்களில் கட்டிகள் போன்று தென்படின் உடன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
பெண்களை மார்பகப் புற்று நோய் அதிகம் தாக்குவதால் ஆரம்ப நிலையில் அவற்றைக் கண்டுபிடித்துவிட்டால் மார்பகங்களை அகற்றாமல் புற்றுநோயைக் குணப்படுத்திக்கொள்ளமுடியும்.
மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கியமாக பரம்பரை காரணி காணப்படுகிறது. அதனைவிட திருமண வயது தாமதமாகுதல், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் விடுதல், ஆரோக்கியம் இல்லாத உணவுகள், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றுடன் இதயநோய்க்கு உண்டான காரணிகளும் மார்பகப் புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகளாக அமைகின்றன– என்றார்





