Breaking news – அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனுஷ்க குணதிலக்க இடைநீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவை, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க நேற்று அதிகாலை அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக குழு அவசரமாக கூடி, குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply