
ஒழுக்கமின்மையே கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஒழுக்கம் இழப்பு கிரிக்கெட் வீரர்களின் தவறு மட்டுமல்ல கிரிக்கெட் நிர்வாகத்தின் தவறு என்றும் நிர்வாகத்தை சரி செய்யாமல் வீரர்களுக்கு ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது என்றும் கூறினார்.
அவுஸ்திரேலியாவில் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு கிரிக்கெட்டுக்கு பிரச்சினையல்ல அது நாட்டுக்கே பிரச்சினை எனவும் மற்றுமொரு வீரர் தனுஷ்க குணதிலக்கவை இந்த நாட்டுக்கு அனுப்பாதது தொடர்பில் கிரிக்கட் நிர்வாகம் உண்மைகளை விளக்க வேண்டும் எனவும் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
துலிப் மெண்டிஸ் தனது தலைமைத்துவ காலத்திலும் அதன் பின்னரும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஒழுக்கத்தை பேணுவதற்கு கடுமையான தீர்மானங்களை எடுத்ததாகவும், அவ்வாறானதொரு நிலைமை தற்போது காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகம் பணத்தால் மூழ்கி கிடப்பதாகவும், அந்த நிலையிலிருந்து விடுபடும் வரை கிரிக்கெட் நிர்வாகமோ, வீரர்களோ மரியாதையாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

