யாழில் பேருந்து சேவையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியான முக்கிய அறிவிப்பு

நாளை முதல் ,யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூர  பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளது.புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் கடந்த 2 வருடங்கள் ,சேவைகள் இடம்பெறவில்லை.பல இழுபறிகள் காணப்பட்டன.

இந்த நிலையில் நாளைய தினம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.இதன் அடிப்படையில் நெடுந்தூரம்,மற்றும் உள்ளூர் மினி வான் தனியார் சேவைகளும் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இடம்பெறும்.

அதே போன்று எ.9 வீதியூடாக வரும் பேருந்துகள் மற்றும் பருத்தித்துறை வீதி ஊடாக வரும் பேருந்துகளும்  ஆஸ்பத்திரி வீதியூடாக இனி உள் நுழைய முடியாது.அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து பேருந்துகளும் கே.கே,எஸ் வீதியூடாகவே உள் நுழைய முடியும்.இந்த நடைமுறை மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும்.அதற்கான  சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

அதே போன்று யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக,மீண்டும் எழ வேண்டும் என்றார்.

Leave a Reply