
இலங்கை அகதிகள் 306 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று, பிலிப்பைன்ஸ், வியாட்நாமுக்கு இடையே உள்ள கடற்பரப்பில் காற்றின் தாக்கம் காரணமாக சேதமடைந்து மூழ்கிக் கொண்டிருப்பதாக குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து கப்பலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 306 இலங்கையர்களையும் காப்பாற்றுமாறு குரல் பதிவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள்இ பெண்கள் சுமார் 40 பேர் உள்ளதாகவும் மொத்தமாக 306 பேர் உள்ளதாகவும் அனைவரும் இலங்கையர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கனடாவுக்கு புகலிடம் தேடி சென்றவர்கள் என தெரியவருகிறது.
இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் தொடர்புகொள்ளப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் பயமின்றி இருக்குமாறு குறித்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவலை அறிய எம்முடன் இணைந்திருங்கள்…





