
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 17 வயதுச் சிறுமி குளிக்கும் போது ,அதனை மறைந்திருந்து 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனை அவதானித்த ஊர் மக்கள்,குறித்த இளைஞனை பிடித்து நையப் புடைத்து , கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இளைஞன் வீடியோ எடுப்பதை குளித்துக்கொண்டிருந்த சிறுமி எதேர்சையாக கண்டுள்ளார். அவர் அலறிய சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு வந்தனர்.வீடியோ எடுத்த இளைஞனை மடக்கிப்பிடித்து ‘முறையாகக் கவனித்தனர். அதன் பின்னர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
வட்டுக்கோட்டை அராலியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

