யாழ். மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு முக்கிய வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்ட மக்கள் அவசர உதவியை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ பிரிவு 0773957894, 0212117117 அல்லது 117 எனும் தொலைப்பேசி இலக்கங்களை அவசர உதவிக்காக விடுத்துள்ளது.

குறித்த அறிவித்தலை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *