கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி குமாரவேளியார் கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கு சீனா உதவி அரிசி பொதிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி.எஸ்.சசிகலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யகம்பத், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தரன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யகம்பத்தினால் சீனா உதவி அரிசி பொதிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டது.
செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தரனின் அழைப்பை ஏற்று செங்கலடி குமாரவேளியார் கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலயத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யகம்பத் பாடசாலை அதிபரிடம் பாடசாலையின் குறைபாடுகளை கேட்டு அறிந்து எதிர்காலத்தில் போதுமான அபிவிருத்திகளை செய்து தருவதாக வாக்கு உறுதி அளித்துள்ளார்.