மக்களிடம் கடன்களை அறவிடும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்

கொழும்பு,நவ 21

கடந்த காலங்களில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான கடன்களை அறவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றச்சாட்டை நாடாளுமன்றில் முன்வைத்தார்.

குறித்த செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை பாதீட்டில் பெருந்தோட்ட மக்களுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, உள்நாட்டு உற்பத்தி மற்றும் விவசாயத்துறையை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா குறிப்பிட்டார்

Leave a Reply