யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானம் இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது.சுமார் 70 வருடங்களுக்கும் அதிகமான பழமையான குறித்த மயானத்தை 4000 மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் செம்மணி இந்து மயான அபிவிருத்திச் சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் இன்று காலை ,மயானத்தில் துப்பரவுப் பணிகள் இடம்பெற்றது.
எதிர் காலத்தில் குறித்த மயானத்தில் மின்சாரத்தில் தகனம் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக மயான அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.







