கொழும்பில் தடம் புரண்டது ரயில்இகரையோர பாதையில் இயக்கப்படும் புகையிரதத்திற்கு சிக்கல்

கொழும்பு கொம்பனி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயில் இன்ஜின் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதையடுத்து கரையோரப் பாதையில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இன்று (26) இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகவோ அல்லது இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த புகையிரதத்தை அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இத்துடன் இந்த ஆண்டில் இலங்கையில் 47 வது தடவையாக புகையிரதம் தடம் புரண்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *