சுகாதாரத் துறையில் ஏற்படும் தடங்களுக்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்

<!–

சுகாதாரத் துறையில் ஏற்படும் தடங்களுக்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் – Athavan News

எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் தடங்கல்கள் ஏற்படுமாயின் அதற்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சில நடவடிக்கைகள் சுகாதாரத் துறையைப் பாதிக்குமாயின், ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கத்தின் மீதே குற்றம் சுமத்த வேண்டும் என அச்சங்கத்தின் உதவிச் செயலாளரான வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறையில் ஏற்பட்ட முரண்பாடுகளை தற்போதைய சுகாதார அமைச்சர் சரி செய்யத் தவறியமையே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply