முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் தற்போது முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இன்று ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரைச் சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவரது உடல்நிலையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, இருதய நோய் நிலைமை தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது முன்னணி நிபுணத்துவ மருத்துவர்கள் அடங்கிய குழுவொன்று மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சிகிச்சையளித்து வருவதாகவும் அறியமுடிகிறது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.





