இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜூலி சுங்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி சுங் அமெரிக்க செனட்டினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இலங்கைக்கான அடுத்த தூதுவராக வெளிவிவகார சேவைகள் பெண் இராஜதந்திரி ஜூலி சுங்கை ஜூன் மாதம் நியமித்திருந்தார்.

எவ்வாறாயினும், தூதுவர் பதவியை பொறுப்பேற்கும் முன்னர் ஜூலி ஜியோன் சுங்கின் நியமனத்தை செனட் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்நிலையில், அவரின் நியமனம் செனட்டினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply