சிவனடிபாதமலையில் தனக்கு தானே தீ மூட்டிய குடும்பஸ்தர் உயிரிழப்பு

கடவத்தை பகுதியில் இருந்து சிவனடிபாதமலைக்கு வந்த 40 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையான கோசல ஹேரத் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நல்லதண்ணி தனியார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து தனக்கு தானே தீ வைத்து தற்கொலை முயற்சி செய்து உள்ளார்.

பாரிய தீ காயங்களுடன் அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்த உள்ளார் என கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இவர் குடும்ப தகராறு காரணமாக தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நல்லதண்ணி பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply