காரைதீவு ராஜ்மோகனின் 43வது படைப்பான சுவாமி விபுலானந்தர் புகழ் பாடல்  வெளியீடு!

( வி.ரி.சகாதேவராஜா)

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் தமிழின் தவப்புதல்வர் சுவாமி விபுலானந்தரின் வாழ்வும் தத்துவமும் போற்றும் புகழ் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

காரைதீவின் பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான இரா. ராஜ்மோகனின் 43வது பாடலாக இந்த புகழ் பாடல் சுய ஆக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Asiians Records நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு, பாடல் வரிகளை யாத்து பாடியவர் காரைதீவு இரா. இராஜ்மோகன் ஆவார்.

இசையை  விநாயகமூர்த்தி செந்தூரனும்,  அனுசரணை & தயாரிப்பை சோ. கேதுஜனும் (UK) பங்களிப்பு செய்துள்ளனர்.

காரைதீவு மண்ணில் பிறந்து, உலகத் தமிழர்களுக்கு யாழ் நூல் தந்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் பெருமையை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இப்பாடல் Asiians Records இன் YouTube, Facebook, Instagram பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply