ஒளிர் சஞ்சிகை வெளியீடு 

( வி.ரி.சகாதேவராஜா)

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் “ஒளிர்” எனும் சஞ்சிகையை  வெளியிட்டு வருகிறது.

 அதன் இரண்டாவது இதழ் அண்மையில் வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதன் அறிமுவிழா கடந்த வாரம் சஞ்சிகையின் உதவி ஆசிரியரும் மேற்படி நிறுவனத்தின் கல்முனை பொறுப்பாளருமான திருமதி ஜெனிதா மோகன் தலைமையில் கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. விழுது நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இவ் விழாவில் இச் சஞ்சிகை வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply