பலாலி வீதியில் விபத்து; ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பலாலி வீதி இலுப்பையடி சந்திப் பகுதியில் விபத்தொன்று இடம்பெறுள்ளது.

குறித்த விபத்தில், பட்டா மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவலர் வீதி வழியாக பயணித்த பட்டா ரக வாகனமும் பலாலி வீதி வழியாக வந்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதியுள்ளன.

இதில் பட்டாவின் முன் சில்லுக்குள் மோட்டார் சைக்கிள் சிக்கி கொண்டதோடு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பாய்ந்ததன் காரணமாக காயமடைந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply