இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும்  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இவ்வாறு  கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர்  குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.

எனினும், வெளியிலிருந்து கொண்டு இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply