எம்.பி ஒருவருக்கு புலனாய்வு தகவல் எவ்வாறு கிடைத்தது? கேள்வி எழுப்பிய சுசில்

‘புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்களின் அடிப்படையில்தான் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்தார்’ என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராட்சி தெரிவித்திருந்தமை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்குக் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலேயே இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீங்கப்பட்டார் என திஸ்ஸ குட்டியாராச்சி நேற்று முன்தினம் ஊட கங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த சுசில் பிரேமஜயந்த, புலனாய்வுப் பிரிவின் அறிக்கை திஸ்ஸ குட்டியாராட்சி போன்ற ஒரு தனிநபருக்கு எவ்வாறு கிடைத்தது எனவும் கேள்வி எழுப்பினார்.

இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

புலனாய்வு அறிக்கைகள், முதலில் புலனாய்வு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.

தேவைப்பட்டால், பாதுகாப்பு சபைக்குக் கொடுக்கப்படும். ஆனால், முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு வந்துள்ள ஒருவருக்கு அந்தத் தகவல்கள் வழங்கப்படாது’ எனவும் தெரிவித்தார்.

Leave a Reply