
தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரை தொடர்பான தகவல்களை அமைச்சர் காமினி லொக்குகே வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மின்சார விநியோகத்தை துண்டிக்காது, மின் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று முதல் மின் விநியோக தடையை ஏற்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய காலப்பகுதி மற்றும் நேரம் குறித்து இலங்கை மின்சார சபையே தீர்மானிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்வெட்டு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்





