
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் சிறியரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி ரயிலுடன் மோதியதில் விமானி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை, வைட்மேன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விமானி தனது விமானத்தை ரயில் தண்டவாளத்தில் தரையிறக்கிய சில நொடிகளின் பின்னர் கடுகதி ரயில் ஒன்று விமானத்துடன் மோதியுள்ளது.
எனினும் ரயில் வருவதற்கு முன்னதாக சடுதியாக செயற்பட்ட பொலிஸார் விமானியை உயிருடன் மீட்டுள்ளனர்.
பொலிஸாரின் இந்த செயலைக்காட்டும் காணொளி சமூகவளைதளங்களில் பரவியதையடுத்து பாலரும் பொலிஸாரை பாராட்டிவருகின்றனர்.
விமான விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான விமானி காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





