நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்

நாட்டில் மின்சார விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

பல தடவைகள் மின்சார சபையின் தலைவராக பதவி வகித்த எம்.எம்.சி.பேர்டினாண்டோ, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையடுத்து, பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.

இதன் காரணமாக, இவரின் செயற்பாடு தொடர்பாக மின் பொறியாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply