இரா.சாணக்கியனுக்கு சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது

இன்ஸ்டிடியூட் ஆஃப் பொலிடிக்ஸ் என்ற அமைப்பினால் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மக்கள் சந்திப்புகள் மற்றும் வேறு சில முக்கிய காரணங்களினால் இரா.சாணக்கியன் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை எனவும் கடந்த வாரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் பொலிடிக்ஸ் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து இரா.சாணக்கியனுக்கான குறித்த விருதை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

வடமராட்சியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!

Leave a Reply