ஆப்கானிஸ்தான் அணியின் சிம்பாப்வே சுற்றுப் பயணம் மீண்டும் பிற்போடப்பட்டது

ஆப்கானிஸ்தான் அணி சிம்பாப்வேக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப் பயணம் இரண்டாவது தடவையாகவும் பிற்போடப்பட்டுள்ளது.

சிம்பாப்வேயில் தேவையான ஒளிபரப்பு சேவைகளை ஏற்பாடு செய்ய முடியாமல் உள்ளதாக இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்தது.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவல் காரணமாகத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம்வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply