செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

<!–

செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு – Athavan News

நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

900 மெகாவோட் உற்பத்தி செய்யும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் மின் பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி செயலிழந்தது.

இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 160 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply