ஹொரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து! 12 பேர் படுகாயம்

கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கும்புக சந்தி பகுதியில் இன்று (01) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

டிப்பர் வாகனத்துடன் பேருந்து மோதியதில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் டிப்பர் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து காரணமாக ஹொரணை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து! நான்காவது நபரும் உயிரிழந்தார்

Leave a Reply