ரஷ்யாவுடனான பதற்றங்களால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படவில்லை – அமெரிக்கா

ரஷ்யாவுடனான தற்போதைய பதற்றங்களால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தின்போது உக்ரைன் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை இந்தியா தவிர்த்திருந்தது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் செட் பிரைஸ் மேற்படி கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பான எங்களின் கவலைகள் குறித்து  நாங்கள் இந்தியா உள்பட உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.

ரஷ்யாவுடனான தற்போதைய பதட்டங்களால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சொந்த தகுதியில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply