யாழ்.மத்திய கல்லூரியை வீழ்த்தி பரியோவான் கல்லூரி வெற்றி! SamugamMedia

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான வடக்கின் போர் துடுப்பாட்டப் போட்டியின் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது ஓவர் போட்டியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி மைதானத்தில் நேற்று(17) இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பரியோவான் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

பரியோவான் கல்லூரி 49.3 ஓவர் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.

218 என்ற இலக்கை நோக்கி பதிலளித்து துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

Leave a Reply