வீதிக்கு இறங்கிய மாணவர்கள் – சற்று முன்னர் பதற்றம்! SamugamMedia

இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத்தை பாதிக்கும் லைசியம் மருத்துவப் பட்ட மோசடியை கொண்டுவருகின்ற அரசாங்கத்தின் சூழ்ச்சியை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று கடவத்த ராகம வீதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

களனி பல்கலைக்கழக மருத்துவ சங்கத்தால் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ருகுனு மருத்துவ பீடத்தில் நடைபெறும் மாண்வர் மீதான அடக்குமுறையை தடுத்து நிறுத்தவும், 

பல்கலைக்கழக மாணவ தலைவர்களான கலும் முதன்நாயக்க மற்றும் தில்சான் ஹர்சன ஆகியோரை விடுவிக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *