காத்தான்குடியில் ஹரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!

<!–

காத்தான்குடியில் ஹரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது! – Athavan News

காத்தான்குடியில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரை 5 அரை கிராம்  ஹரோயின்  போதைப் பொருளுடன் இன்று (திங்கட்கிழமை) காலையில் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலையில் பொலிசார் காத்தான்குடி மீன்பிடி இலாக வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது  குறித்த நபரை மடக்கிபிடித்து கைது செய்யததுடன் அவனிடமிருந்து 5 அரை கிராம் ஹரோயின்  போதைப் பொருளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


Leave a Reply