
LDSP நிதி ஒதுக்கீட்டின் கீழ் சத்தியக்காட்டு மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில், பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரனால் இக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனையோர் அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.
இந்நிகழ்வில், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.






