
படம் நல்லா வரவேண்டும் என்றால் என்ன செய்யவும் தயார் என்று சில கதாநாயகர்கள் தன் உடலை வற்புறுத்தி எடையைக் குறைப்பார்கள். அல்லது கூட்டுவார்கள். சிலர் மொட்டை அடிப்பார்கள். இது வேண்டுதலுக்காக அல்ல. படத்தின் வெற்றிக்காக.
இந்த மொட்டை படத்தின் கதைக்காக அந்த கதாநாயகர்கள் நிஜமான கதாபாத்திரமாக மாற வேண்டும் என்பதற்காகவே இப்படி மொட்டை அடிக்க ஒப்புக்கொள்கிறார்கள். அந்தவகையில் அவர்களின் படங்களில் ஒரு சில மெகா ஹிட் ஆகியுள்ளன. ஒருசில படங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்தாலும் தோல்வி அடைந்துள்ளன.
கமல்ஹாசன்
கமல்ஹாசன் ஆளவந்தான் மற்றும் விருமான்டி படங்களில் மொட்டை அடித்து நடித்துள்ளார். இவற்றில் ஆளவந்தான் படத்தில் மொட்டை மட்டுமின்றி உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாகவும் நடித்துள்ளார்.
இதுவரை எந்த சினிமா நடிகர்களும் இப்படி நடித்ததிலை. இந்தப்படங்களில் விருமான்டி ஓரளவு வெற்றி வாகை சூடியது. இருபடங்களிலும் கமலின் நடிப்பு சூப்பர். ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்த படம் விருமான்டி.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் சிவாஜி படத்தில் தான் மொட்டை அடித்துள்ளார். இந்தப்படத்தில் ரஜினிகாந்த் சிவாஜி என்ற கேரக்டரில் வந்து மொட்டை போட்டு ஸ்டைலாக தலையில் விரல்களால் தாளம் போட்டு அதகளப்படுத்துவார்.
சிவாஜியும் நான் தான். எம்ஜிஆரும் நான் தான் என்று பஞ்ச் டயலாக் பேசுவார். படம் மெகா ஹிட் ஆனது.
சரத்குமார்
சரத்குமார் சூரியன் படத்திற்காக மொட்டை அடித்து அசத்தினார். இந்தப்படத்தில் சரத்குமாரின் நடிப்பு அற்புதமாக இருக்கும். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் கொடுத்த படம் சூரியன். மெகா ஹிட் ஆனது.
சத்யராஜ்
தமிழ் சினிமாவிற்காக அதிக தடவை மொட்டை போட்ட கதாநாயகன் யார் என்றால் அது சத்யராஜ் தான். 100வது நாள், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை, மாறன், பாகுபலி ஆகிய படங்களில் மொட்டை போட்டு அசத்தியுள்ளார்.
இவற்றில் ஜல்லிக்கட்டு, அமைதிப்படை, பாகுபலி ஆகிய படங்கள் செம ஹிட் ஆனது. இந்தப்படங்களில் சத்யராஜ் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அமைதிப்படை ரோல் சத்யராஜின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்.
அஜீத்
அஜீத் ரெட் படத்திற்காக மொட்டை போட்டு அசத்தியுள்ளார். மொட்டையில் லேசாக வளர்ந்த முடியுடன் அஜீத்தின் நடிப்பு பிரமாதமாக இருக்கும். இது ஒரு ஆக்ஷன் படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் ஆனது.
விக்ரம்
விக்ரம் சேது படத்தில் மொட்டை போட்டு மனநலம் குன்றியவராக நடித்து இருப்பார். இந்தப்படத்தைப் பார்க்கும்போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும். அவ்வளவு அபாரமான நடிப்பை விக்ரம் வெளிப்படுத்தியிருப்பார். படமும் செம ஹிட் ஆனது.
சூர்யா
சூர்யா கஜினி படத்தில் மொட்டை போட்டு நடுவில் ஒரு கோடு போட்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து நம்மைக் கவர்ந்திருப்பார். ஷார்ட் டர்ம் மெமரி என்ற ஒரு வித்தியாசமான மறதி நோயால் அவதிப்படுபவராக வந்து அசத்துவார்.
இவர் தான் கொலை செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு வைத்து இருப்பவர்களின் பெயரை தனக்கு மறந்து விடக்கூடாது என்பதற்காக உடல் முழுவதும் எழுதியிருப்பார். ரசிகர்களின் மத்தியில் படம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.
இவர்கள் தவிர அருண்விஜய் மாஞ்சாவேலு படத்திலும், விக்னேஷ் சூரி படத்திலும், மாதவன் ஆயுத எழுத்து படத்திற்காகவும் மொட்டை போட்டு நடித்துள்ளனர். இவை அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





