
கொழும்பு, பெப் 9: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குஷால் மென்டிஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
“ரேப்பிட் அன்டிஜென்’ பரிசோதனையின்போது, குஷால் மென்டிஸுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்று இலங்கை அணித்தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.
மென்டிசிற்கு பதில் தினேஸ் சந்திமல் விக்கெட் காப்பாளராக களமிறங்குவார் என தசுன் சானக அறிவித்துள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டி சிட்னியில் வெள்ளிக்கிழமை
ஆரம்பமாகவுள்ளது.





