<!–
சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சு, குறித்த போராட்டத்திற்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட வைத்திய சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விஜேசூரிய, நாட்டில் கொரோனா நிலைமை மோசமாகி வரும் இந்த சூழ்நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது உண்மையில் நியாயமற்றது என தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை போராடிக்கொண்டிருக்கும் இந்த கட்டத்தில் அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்றும் எவ்வாறாயினும் தாங்கள் விவாதங்களுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






