பிரதமரை விமர்சிக்க வேண்டாம் என தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் – பெண் குற்றச்சாட்டு

பிரதமரை விமர்சிக்க வேண்டாம் என்று தனக்கு அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக ஆண்டின் சிறந்த அவுஸ்ரேலியர் என பட்டத்தை வென்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு அரசு நிதியுதவி பெறும் அமைப்பின் மூத்த உறுப்பினரிடமிருந்து அழைப்பு வந்ததாக கிரேஸ் டேம் கூறியுள்ளார்.

ஸ்கொட் மொரிசனைப் பற்றி அபாண்டமான எதையும் கூறமாட்டேன் என உறுதியளிக்குமாறு தான் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இருப்பினும் இந்த அழைப்பு குறித்து தமக்கு தெரியாது என்றும், விசாரணை நடத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply