
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிலும், ஹிஷாலினி உயிரிழந்த வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றமும் இவருக்கு பிணை வழங்கியிருந்தது.
இந்நிலையிலே, 3 மாத காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு





