சுற்றுலாப் பயணிகள் தொடர்பான விசேட அறிவிப்பு

கொழும்பு, பெப் 10: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, நைஜீரியா, கானா, ஐவரி கோஸ்ட், கேமரூன், மியான்மர், நேபாளம், வட கொரியா நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை விமான நிலையங்களில் ETA விசா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை கூறியிருப்பது: சுற்றுலாப் பயணிகள், நேரமின்மை காரணமாக ஆன்லைன் முறையில் ETA விசாவைப் பெற முடியாமல் போனால், அவர்களுக்கு உடனடி ETA விமான நிலையத்தில் வழங்கப்படும்.

ஆனால், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, நைஜீரியா, கானா, ஐவரி கோஸ்ட், கேமரூன், மியான்மர், நேபாளம், வட கொரியா நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ETA விசா வழங்கப்படாது. அவர்கள் முற்கூட்டியே ஆன்லைன் முறையில் ETA விசாவை பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply