
இலங்கையின் பூப்பந்து வீராங்கனை ஓஷதி குறுப்பு சமீபத்தில் காலமானார்.
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி பல சர்வதேச பூப்பந்துப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் அணிப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஓஷதி குறுப்பு, வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஓஷதியின் பூதவுடல் தற்போது பொரலஸ்கமுவவிலுள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





