பொரளையில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம்

பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமையாளரின் வீட்டில் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் மலர்ச்சாலை உரிமையாளரின் வீட்டிற்குள் நுழைந்து 553,000 ரூபா பணம் மற்றும் தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் மூன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நவகமுவ – கொரத்தொட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தாம் கொள்ளையிட்ட பணத்தை வைத்து சில பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் கடந்த 6ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply