ஒரே ஒரு பாட்டை வைத்து ஒரு கோடி சம்பாதித்த விஜய் டிவி பிரபலம்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா. இவர் இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்று விட்டார் என கூறலாம்.

இது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் பாடிய மன்னவன் பேரைச் சொல்லி என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலம் அடைந்தது. ஜானகியம்மா குரலையே மறக்கும் அளவிற்கு எங்கும் பிரியங்காவின் குரல் இந்தப் பாடலால் ஒலிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரியங்கா பங்கேற்ற போது இந்த பாடலை பாடச் சொல்லி உள்ளனர்.

பாடலை பாடி முடித்த பிறகு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி மைனா நந்தினி இந்தப் பாடலால் பிரியங்கா ஒரு கோடி ரூபாய் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply