நம்ம கண்ணம்மாவா இது? நீச்சல் குளத்தை பார்த்ததும் என்னமா ஆடுறாங்க!

Roshini haripriya dance video infront of swimming pool: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷ்னி ஹரிபிரியன்.

கணவன் மனைவிக்குள் நடக்கும் சந்தேக போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் அருண் பிரசாத், ரோஷ்னி ஹரிபிரியன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷ்னி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் சீரியலை விட்டு வெளியேறிய பிறகு, வேறு ஒருவர் கண்ணம்மா ரோலில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சமுகவலைத்தளங்களில் ஆக்டீவாக வீடியோ, மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்கள் என தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீச்சல் குளம் முன் நின்று ஒரு பாடலுக்கு அவர் நடனமாடி இருக்கிறார். அந்தப் பாடல் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply