
எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிங்கள செய்தி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தமது கட்சிகள் முன்வைத்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிதளவும் அக்கறை காட்டப்படவில்லை என வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
இதேவேளை தான், அரசாங்கத்தில் பலம் பொருந்தியவர் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





