ஓமிக்ரோன் விரைவாக பரவும் தன்மையுடையது: சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்

கொழும்பு, பெப் 12: ஓமிக்ரோன் திரிபின் தனிப்பட்ட சிறப்பியல்புகளாக, விரைவான ஆரம்பம், விரைவான தொற்று, விரைவான குணமடைதல் ஆகியவற்றைக் கூறலாம் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பாக வர மேலும் கூறுகையில் “ஓமிக்ரோன் திரிபு விரைவாக பரவும் தன்மை உடையதுடன், விரைவாக குணமடையும் இயல்பும் கொண்டது. இதனால், ஓமிக்ரோன் தொற்றிலிருந்து மீண்டவர்கள் ஒரு வாரத்தில் இயல்பு வாழ்கைக்குத் திரும்பலாம்.

இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கு, ஓமிக்ரோன் திரிபு ஏற்பட்டால், நோய் தீவிரமடையக்கூடும். அண்மையில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளில் பெரும்ம்பாலானவர்கள் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply