யாழ்ப்பாணம் வருகிறார் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க

கொழும்பு, பெப் 14: கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க, குழுவினர் வரும் பிப்ரவரி 18, 19 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில்நடைபெறவுள்ள நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.

யாழ்.மாநகர சபை மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச சபைகளை ரோஸி சேனநாயக்க நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

குறித்த 2 நாள் பயணத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் 70 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply