திருகோணமலையில் புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

திருகோணமலை – கோமரங்கடவெல பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராக எஸ். கமல்ராஜ் நியமிக்கப்படுள்ளார்.

2021 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்டதன் பின்னர் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை மூன்றாம் தர உத்தியோகத்தரான இவர், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்ப பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply