
ஹட்டன் – கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்தியராக நடித்து, நபரொருவர் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளார்.
அதன்படி, அப்பகுதி இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தியராக நடித்து நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாகவும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஹட்டன், கொட்டகலை பிரதேசத்தில் உள்ள மருந்து விற்பனை நிலையமொன்றின் ஊழியர் என்பதுடன், அவரிடமிருந்து 338 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.





