நாய்கள் இல்லாத இடங்கள் இல்லையென்றே கூறலாம். இந்த நாய்களில் வெளிநாட்டு நாய்களின் விலை அதிமாகவே காணப்படும்.ஆனாலும் வீட்டுக்கு நன்றி உள்ள மிருகமாக நாய் காணப்படுகிறது.பலரின் பொழுது போக்கு மற்றும் செல்லப் பிராணியாக இந்த நாய்கள் வளர்க்கப்படுகிறது.
இந்த நாய்கள் பல நிறங்களில் காணப்படுகிறது. இந்த நிலையில் நீலம் மற்றும் பச்சை நிறங்களில் நாய்கள் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா.
மொஸ்கோவிலிருந்து 200 கிலோ மீற்றர் தூரத்தில் சென்சிக் என்ற பிரதேசத்தில் நீலம் மற்றும் பச்சை நிறங்களில் நாய்கள் உள்ளதாம். அங்கு உள்ள தொழில் சாலையில் ஒன்றிலிருந்து வெளியேறும் இராசயன கழிவுகளிருந்து ஹைரோ சைனைட் மற்றும் பிலாஸ்ட்டி கிளாஸ்ட் என்ற பொருட்கள் வெளியேற்றப்படுவதால் அங்குள்ள நாய்கள் இந்த நிறங்களில் மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது.







