வெளிநாட்டுக்கான பி.சி.ஆர். சோதனைக்கு யாழ். போதனாவில் இனிக் கட்டணம்!

வெளிநாடு செல்வோர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கு கட்டணம் அறவிடப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும், பி.சி.ஆர். பரிசோதனைக்காக 6 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படும் என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் கலாநிதி கே.நந்தகுமாரன் தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்தக் கட்டணம் அறவிடப்படுகின்றது என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply